/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிக்கு தீ வைப்பு: கேரள போலீஸ் விசாரணை
/
அங்கன்வாடிக்கு தீ வைப்பு: கேரள போலீஸ் விசாரணை
ADDED : அக் 29, 2024 06:37 AM

வால்பாறை: தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை, கேரள போலீசார் தேடுகின்றனர்.
தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. கேரள மாநிலம் எல்லையில் உள்ள, மளுக்கப்பாறை பழங்குடியினர் காலனில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், ஏழு பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், அங்கன்வாடி பணியாளர் நேற்று முன்தினம் வழங்கம் போல் அங்கன்வாடியை பூட்டி சென்றார். நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கன்வாடி தீயில் கருகியதோடு, அங்கு இருந்த குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.
இது குறித்து, அங்கன்வாடி பணியாளர் சுபர்ணா கொடுத்த புகாரின் பேரில், கேரள மாநிலம், மளுக்கப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கன்வாடிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.