/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கப்பா அகாடமி ஆண்டு விழா சிறப்பு
/
அங்கப்பா அகாடமி ஆண்டு விழா சிறப்பு
ADDED : பிப் 06, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கவுண்டம்பாளையம், அங்கப்பா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'ஐ லவ் கோவை' என்ற பெயரில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி தாளாளர் கார்த்திகேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வரலாற்று ஆய்வாளர் ராஜேஷ் கோவிந்தராஜுலு கலந்து கொண்டார்.
கோவையின் பெருமைகளைக் எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றினர். பள்ளியின் நடப்பாண்டு நிகழ்வுகள் செய்தி மலராக வெளியிடப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.