/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
‛ஏஞ்சல் அண்ட் ராக்கெட்' புதிய ஷோரூம் திற ப் பு
/
‛ஏஞ்சல் அண்ட் ராக்கெட்' புதிய ஷோரூம் திற ப் பு
ADDED : ஜன 27, 2025 12:33 AM

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடை ரகங்களை கொண்ட 'ஏஞ்சல் அண்ட் ராக்கெட்' ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
லண்டனை தாயகமாக கொண்டு 'ஏஞ்சல் அண்ட் ராக்கெட்' என்ற ஷோரூம், 2014ல் துவங்கப்பட்டது. இந்தியாவில் 2019ம் ஆண்டில், லக்னோ, ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் துவங்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக, கோவையில், ஆர்.எஸ்.,புரம் டி.பி., ரோட்டில், எஸ்.பி., ரீடெய்ல் வென்சர் லிட்., உடன் இணைந்து, நேற்று புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சல் அண்ட் ராக்கெட் நிர்வாக இயக்குனர் செந்துாரான், இயக்குனர்கள் ஜோயல் பாஸ்டாக், லுாயிஸ் பாஸ்டாக், கேட் பாஸ்டாக், அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் சீனிவாசன், எஸ்.பி., அப்பேரல்ஸ் லிட்., தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தரை தளம் மற்றும் முதல் தளங்களை கொண்ட ஷோரூமில், பிறந்த குழந்தை முதல், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஆடை ரகங்கள், கண்கவர் வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளன.

