/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாநகரில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு! கண்டு கொள்ளாத அதிகாரிகளால் வேதனை
/
அண்ணாநகரில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு! கண்டு கொள்ளாத அதிகாரிகளால் வேதனை
அண்ணாநகரில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு! கண்டு கொள்ளாத அதிகாரிகளால் வேதனை
அண்ணாநகரில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு! கண்டு கொள்ளாத அதிகாரிகளால் வேதனை
ADDED : ஜன 15, 2024 10:00 PM

வால்பாறை:வால்பாறை, அண்ணாநகரில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரின் மத்தியில் அண்ணாநகர் அமைந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இந்தப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீராமர் கோவிலுக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், நடைபாதை இடிந்த நிலையில் உள்ளது. குடியிருப்புகளை சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால், இரவு நேரத்தில் சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. குறிப்பாக, வீடுகளின் முன் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டுமென்ற பல ஆண்டு கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: அண்ணாநகர் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள ரோட்டை சீரமைத்துத்தரக்கோரி, பல ஆண்டுகளாக பேராடி வருகிறோம். குடியிருப்பு பகுதியின் மத்தியில் வரும் சாக்கடை கால்வாயினால், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளதோடு, மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் வரிவசூலில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளும் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.
இவ்வாறு, கூறினர்.