/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளிக்கு அணிவகுக்கும் அன்னபூர்ணா ஸ்வீட்ஸ்
/
தீபாவளிக்கு அணிவகுக்கும் அன்னபூர்ணா ஸ்வீட்ஸ்
ADDED : அக் 24, 2024 10:06 PM

தீபாவளிக்கு இன்னும், 7 நாட்களே உள்ள நிலையில், 'ஆகா, நாம இன்னும் களத்துல இறங்கலியே... இந்த வருஷத்துக்கு புதுசா என்ன ஸ்வீட் செய்றது?' என, நீங்களும் மூளையைக் கசக்க ஆரம்பித்திருப்பீர்கள். தீபாவளி என்றாலே ஒவ்வொருவரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பண்டிகையாகத் தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடைகளிலும், பட்டாசுகளிலும் புதிய ரகங்கள், தொழில்நுட்பங்கள் புகுந்து கொள்கின்றன. இனிப்புகளில் மட்டும் என்ன செய்ய முடியும் என, எண்ணுபவர்களுக்கு இந்தாண்டு அணி வகுக்கின்றன இனிப்பு ரகங்கள்.
பிக் அல்வா, கேசர் பேடா, ஸ்பான்ச் அல்வா, காஜு இதெல்லாம் என்ன என்று கேட்குறீங்களா. இவை அனைத்தும் இனிப்பு வகைகளின் பெயர்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய ரக ஸ்வீட்களை அறிமுகம் செய்யும் அன்னபூர்ணா ஓட்டல் இந்த ஆண்டும் புதிய ரக இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்னபூர்ணா ஓட்டல்கள் முதன்மை செயல் அலுவலர் ஜெகன் தாமோதரசாமி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதிய இனிப்புகளை அறிமுகம் செய்கிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்தாண்டும், பல்வேறு புதிய இனிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களது தயாரிப்பான கிளாசிக் கலெக்சன் சிறிய மற்றும் நடுத்தர அளவுகளில் கிடைக்கின்றன. நடுத்தர அளவில் மைசூர்பாகு, சோன்பப்படி, அமுதம் லட்டு, சந்திரகலா, மினி பாதுஷா, ஸ்பான்ச் அல்வா, பழம் மற்றும் நட்ஸ் பர்பி உள்ளிட்ட, 14 இனிப்புகள் இருக்கும். இதுதவிர பரிசு பெட்டிகளும் உள்ளன. முழுவதும் முந்திரியால் செய்யப்பட்ட லட்டு, பிஸ்தா லட்டு, அல்மோண்ட் சாக்லேட் லட்டு, பாதாம் ரோஸ் லட்டு, ரோஸ் பிஸ்கட், முந்திரி பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட், பிஸ்தா பிஸ்கட், பிஸ்தா மைசூர்பாக், ஆப்பிள் மைசூர்பாக் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுதவிர, ரியல் மைசூர்பாக், பேரிச்சம்பழம் மிட்டாய், முந்திரி மைசூர்பாக், கருப்பட்டி மைசூர்பாக் உள்ளிட்டவையும் உள்ளன. காஜு பைட் பல்வேறு சுவைகளில் கிடைக்கின்றன. வழக்கமான கார வகைகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு, கூறினார்.