/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : டிச 30, 2025 05:08 AM

கோவை: கோவை வித்யாஷ்ரம் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைவர் பழனிச்சாமி மற்றும் பள்ளி தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் நந்தினி பாய், பள்ளி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குஷால்,சரத்,பிரனேஷ் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆஷி, அர்ஜூன்,தேவநந்தா ஆகியோருக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதன
'தொழில்நுட்பம் இன்றிலிருந்து எதிர்காலம் வரை' என்ற கருப்பொருளை மையப்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொழில்நுட்பத்தால் எதிர்காலப் பணிகள், உணவு, மருத்துவம் போன்றவற்றில் நிகழப் போகும் மாற்றங்களை மாணவர்கள் பாடல், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக கண்முன்னே கொண்டு வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

