ADDED : ஜன 26, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
கோவை: ராமநாதபுரம் அருகே டெய்ஸி ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் எட்டாவதுஆண்டு விழா மற்றும் குடியரசு தின கொண்டாட்டம் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. நேற்று மாலை குழந்தைகளின்நடனம், இசை நிகழ்ச்சி நடந்தது.
பங்கேற்றகுழந்தைகளுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. ஓவியம், செஸ், லக்கி கார்னர் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, டெய்ஸி ரெசிடென்சி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் பரிசுகள் அளிக்கப்பட்டன.
சங்க தலைவர் பாலசுப்ரமணியன் பேசுகையில்,''இங்குள்ள 124 வீடுகளில் வசிப்பவர்களும் அண்ணன், தம்பி போல் பழகி வருகின்றனர். எதிர்காலத்திலும் இது தொடரும்,'' என்றார்.
செயலாளர் நாகராஜன், துணை தலைவர் சாலமன் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர்.
