/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துவக்க பள்ளிகளில் ஆண்டு விழா
/
அரசு துவக்க பள்ளிகளில் ஆண்டு விழா
ADDED : பிப் 12, 2024 12:17 AM
அன்னுார்;அன்னூர் வடக்கு துவக்கப்பள்ளியில், ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை சுப்புலட்சுமி வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலர் மணிகண்டன் பரிசு வழங்கினார். சிறந்த மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் சார்பில் மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
தொட்டியனூர், துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியை நீலாவதி வரவேற்றார். வார்டு உறுப்பினர் ரங்கநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கற்றலிலும், விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் லக்கி கார்னர் போட்டி நடத்தி அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியை சவிதா மற்றும் பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.