ADDED : அக் 07, 2024 12:45 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், 55வது ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ் பேசுகையில், ''அனைவரும் காலத்தின் முக்கியத்துவம் கருதி, தங்களுடைய செயல்களை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், தங்களுடைய குழந்தையை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசி தாழ்வு மனப்பான்மை வளர்த்தல் கூடாது'' என்றார்.
பள்ளியின் செயலாளர் பிரீத்தா பிரியதர்ஷினி, தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் குறித்து எடுத்துக் கூறினார். விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர் மற்றும் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.