/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெய் வாங்கி பணம் தராமல் மோசடி; கருப்புசாமி மீது மேலும் ஒரு வழக்கு
/
நெய் வாங்கி பணம் தராமல் மோசடி; கருப்புசாமி மீது மேலும் ஒரு வழக்கு
நெய் வாங்கி பணம் தராமல் மோசடி; கருப்புசாமி மீது மேலும் ஒரு வழக்கு
நெய் வாங்கி பணம் தராமல் மோசடி; கருப்புசாமி மீது மேலும் ஒரு வழக்கு
ADDED : டிச 25, 2024 04:44 AM
கோவை; கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி என்கிற கோபி, 47. இவர் வெளி மாவட்டங்களில் இருந்து மிளகு, இஞ்சி, நெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை, டன் கணக்கில் வாங்கி அதற்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து வந்தார்.
இவர் மீது கோவை பீளமேடு, ராமநாதபுரம், சாய்பாபா காலனி, சூலுார் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், 19 வழக்குகள் உள்ளன. கருப்புசாமியை கடந்த 21ம் தேதி ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் என்பவர், கருப்புசாமி மீது புகார் அளித்துள்ளார். புகாரில், 'கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய் வியாபாரம் செய்து வருகிறேன். கோவையை சேர்ந்த கருப்புசாமி என்பவர் என்னை தொடர்பு கொண்டு, தான் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பால், நெய், முட்டை சப்ளை செய்து வருவதாகவும், தனக்கு தற்போது 100 'டின்' நெய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 680 மதிப்பிலான 30 டின் நெய்யை, கடந்த 12ம் தேதி அனுப்பினேன். அதை ராமநாதபுரம், புலியகுளம் ரோட்டில் வைத்து கருப்புசாமி பெற்றுக்கொண்டு, அதற்கு ஒரு காசோலையை கொடுத்தார்.
காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. மோசடி செய்த கருப்புசாமி மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.