/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 30, 2025 12:28 AM
கோவை, ; பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு, பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, கோவையில் முடிவடைந்தது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 19ம் தேதிக்கு முன் முடிவடைந்த நிலையில், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், தொடர்ந்து நடைபெற்றன.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள, மூன்று மையங்களில் இந்த திருத்தும் பணிகள் நடைபெற்றன. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வுக்கான 58 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, 95 சதவீத பணி முடிவடைந்துள்ளது.
வேதியியல் மற்றும் வணிகவியல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்புக்கான 35 ஆயிரம் விடைத்தாள்ள் திருத்தும் பணி முடிந்துவிட்டது.
கோவை கல்வி மாவட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இங்கு 85 ஆயிரம் பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. வி.சி. சுப்பையா மெட்ரிக் பள்ளியில் 65 ஆயிரம், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக, கோவை வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பிற்கான 1.80 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த பணிகளில், 2,500 முதல் 3,000 வரை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.