/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத் தேர்வு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் 'ரெடி'
/
பொதுத் தேர்வு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் 'ரெடி'
ADDED : பிப் 12, 2025 11:53 PM
கோவை; கோவை மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 6.5 லட்சம் விடைத்தாள்கள் தைத்து தயாராக உள்ளது.
தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச்-ஏப்., மாதங்களில் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில், 1.12 லட்சம் மாணவர்கள், 279 மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். கோவை கிக்கானி பள்ளியில், தேர்வுக்கான விடைத்தாள் தைக்கும் பணி நடந்தது.
18 தையல் இயந்திரங்கள் கொண்டு, ஆசிரியர்கள் உதவியுடன் முதன்மை விடைத்தாளுடன், முகப்பு தாள் இணைத்து தைக்கப்பட்டது. மொத்தம் 6.5 லட்சம் விடைத்தாள்கள்.
அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் சதீஸ்குமார் கூறுகையில், ''விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்து, அனைத்தும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

