தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘அதிரடி சரவெடி’ டெங்கு தடுப்பு போட்டி துவக்கம்

‘அதிரடி சரவெடி’ டெங்கு தடுப்பு போட்டி துவக்கம்

‘அதிரடி சரவெடி’ டெங்கு தடுப்பு போட்டி துவக்கம்


ADDED : அக் 22, 2026 07:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த டெங்கு பிரிவென்சன் லீக்(டி.பி.எல்.) போட்டியில் கிழக்கு மண்டலம் 60 லட்சத்து 65,000 டெங்கு உற்பத்தி கலன்களை அகற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், ‘அதிரடி சரவெடி’ என்ற தலைப்பின் டெங்கு தடுப்பு கூட்டு துாய்மைப்பணி போட்டி இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை நடக்கிறது. நன்னீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்திக்கு காரணமான டயர், டப்பா, தேங்காய் சிரட்டை உள்ளிட்ட கலன்களை அதிகம் அகற்றுபவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

முதல் பரிசாக ரூ.10,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, இரண்டாவது பரிசாக ரூ.5000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, மூன்றாம் பரிசாக ரூ.3,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, நான்காம் பரிசாக ரூ.2,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி, ஐந்தாவது பரிசாக ரூ.1,000 மதிப்பிலான பட்டாசு பெட்டி வழங்ப்படும் என, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us