/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 05:29 AM
போத்தனூர்; கோவை, வெள்ளலூர் பஸ் திருப்பத்தில், வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், குப்பை கழிவு கொட்டுவதை நிறுத்தாவிடில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50 பெண்கள் உள்பட, 150 பேர் பங்கேற்றனர்.
இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறியதாவது:
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகழிவு, மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகத்தில் கொட்டப்படுவதால் மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
நிலத்தடி நீர், காற்று மாசடைந்துள்ளது. துர்நாற்றம், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த குப்பை கழிவை, 100 வார்டுகளிலும் உள்ள ரிசர்வ் சைட்களில் கொட்டலாம்.
அல்லது ஐந்து மண்டலங்களிலும் தலா ஒரு இடம் என ஐந்து இடங்களில் கொட்டலாம். இதன் மூலம் இப்பகுதியில் பாதிப்பு குறையும். இதனை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மாநிலம் முழுவதும் குப்பை கழிவு கொட்டும் இடங்களை அரசே கண்டறிந்து, அரசாணை வெளியிட வேண்டும். இதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

