/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள எல்லையோரத்தில் கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை
/
கேரள எல்லையோரத்தில் கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை
கேரள எல்லையோரத்தில் கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை
கேரள எல்லையோரத்தில் கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை
ADDED : மே 21, 2025 11:29 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே கேரள எல்லையோரம் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல்கள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பில்லூர் டேம், முள்ளி பகுதிகளில் கடந்த மாதம் போலீசார் ரோந்து சென்ற போது, கேரள இளைஞர்கள் இருவர் குந்தா ஆற்றின் கரையோரம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் சாராய பொருட்களை ஊற வைத்திருந்தது தெரியவந்தது. 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, முள்ளி, கோபனாரி, பில்லூர் டேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காரமடை போலீசார், கள்ள சாராயம் காய்ச்சுவதை தடுக்க, ஊறல்கள் எதுவும் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.
அவ்வப்போது தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.--