/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி விளையாட்டு திடல் இரவு நேரங்களில் சமூக விரோதிகள்... அட்டூழியம்
/
மாநகராட்சி விளையாட்டு திடல் இரவு நேரங்களில் சமூக விரோதிகள்... அட்டூழியம்
மாநகராட்சி விளையாட்டு திடல் இரவு நேரங்களில் சமூக விரோதிகள்... அட்டூழியம்
மாநகராட்சி விளையாட்டு திடல் இரவு நேரங்களில் சமூக விரோதிகள்... அட்டூழியம்
ADDED : ஜன 02, 2026 05:05 AM

கோவை கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஸ்டேடியத்தில் கால் பந்து, தடகள போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்காக ரூ.6.55 கோடியில் 'சிந்தடிக் டிராக்' அமைக்கப்பட்டது. ஸ்டேடியம் எதிரே, மாநகராட்சி திடலில் வாலிபால், கபடி, கால்பந்து போட்டிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் இளைஞர்களும் காலை, மாலை நேரங்களில் பயிற்சி செய்கின்றனர்.
இந்த திடலில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு, 7:00 மணி வரையே பயிற்சி செய்ய முடியும். போட்டி நடக்கும் சமயத்தில் மட்டும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் இருட்டை சாதகமாக்கி சமூக விரோத செயல்கள் அப்பட்டமாக அரங்கேறுகிறது.
அதன் அடையாளமாக மது பாட்டில்கள், ஆணுறைகள் மைதானத்தின் நடுவிலும் சிதறி கிடக்கின்றன. குப்பை தொட்டியில் ஆணுறைகள் குவிந்து கிடப்பதை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். எத்தனை பேர் சகஜமாக அந்த இடத்தை தப்பான காரியங்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு அதுவே சாட்சியாக உள்ளது. திடலை சுற்றியுள்ள கம்பி வேலியில் இருக்கும் ஓட்டை வழியாகவும், சில சமயங்களில் இரும்பு கேட்டுக்குள் புகுந்தும் சமூக விரோதிகள் அத்துமீறி செயல்படுகின்றனர்.
தற்போது, வாலிபால் போட்டிக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்கென மைதானத்தில் வைக்கப்படும் கட்டுமான பொருட்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிறது.
பயிற்சியாளர்கள் கூறுகையில்,'வீரர்கள் பயிற்சி எடுக்கும் இடத்தில் இப்படி நடப்பது வேதனைக்குரியது. இதை பார்த்து பயிற்சி எடுக்கும் மாணவர்களும் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களது எதிர்காலமே சீரழிந்துவிடும். எனவே, உடனடியாக சுற்று சுவர் கட்ட வேண்டும்' என்றனர்.
மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் நித்யாவிடம் கேட்டபோது,''திடலில் தற்போது அரங்கு அமைக்கப்படுகிறது. அதோடு வேலி அமைக்கவும் திட்டம் உள்ளது,'' என்றார்.

