/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த புத்தகம் எடுத்தாலும்... 99 ரூபாய்! புத்தகத் திருவிழாவில் குஷி
/
எந்த புத்தகம் எடுத்தாலும்... 99 ரூபாய்! புத்தகத் திருவிழாவில் குஷி
எந்த புத்தகம் எடுத்தாலும்... 99 ரூபாய்! புத்தகத் திருவிழாவில் குஷி
எந்த புத்தகம் எடுத்தாலும்... 99 ரூபாய்! புத்தகத் திருவிழாவில் குஷி
ADDED : ஜூலை 20, 2025 01:41 AM

கோவை: கொடிசியா வளாகத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில், புத்தகப் பிரியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளைக் கவரும் வகையில் புத்தகங்களும், ஆபர்களும் அதிகம் உள்ளன.
புத்தகப் பிரியர்களுக்காக 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவுப் பதிப்புகளும் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை கவர கல்விக்கான புத்தகங்கள், புதிர்கள், ஓவியம், காமிக்ஸ், சிறுகதைகள், மொழி அறிவை வளர்ப்பதற்கான புத்தகங்கள், க்விஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கான புத்தகங்கள், கணிதம், சிறார்களுக்கான மாத இதழ்கள் என, வகை வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
சில அரங்குகளில், 'எந்தப் புத்தகம் எடுத்தாலும் 99 ரூபாய்' என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பல புத்தகங்கள் அடங்கிய தொகுப்புக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுகள், உயர்கல்விக்கான புத்தகங்கள் பலவற்றுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜப்பானின் மங்கா எனப்படும் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு சிறார்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால், நரூடோ, பொரூடோ, ஒன் பஞ்ச் மேன். பியாச், போகிமான், டிராகன் பால், பென் டன் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன. ஜப்பானின் தத்துவங்களுக்காகவே பிரத்யேக ஸ்டாலும் இடம்பெற்றுள்ளது.
விடுமுறை தினத்தில் குழந்தைகளோடு செல்லுங்கள். வாசிப்பு பழக்கம் அவர்களைத் தொற்றிக் கொள்ளட்டும்.