/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிரைவர் சீட் அருகே அமர்பவரும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்'
/
'டிரைவர் சீட் அருகே அமர்பவரும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்'
'டிரைவர் சீட் அருகே அமர்பவரும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்'
'டிரைவர் சீட் அருகே அமர்பவரும் 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்'
ADDED : ஜன 03, 2026 05:14 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து, காரில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், மரக்கிடங்கு அருகே மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், டி.எஸ்.பி., பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் ஆகியோர் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், சீட் பெல்ட் அணிந்து வருகின்றனரா என கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
பின் வாகன ஓட்டிகளிடம், 'சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது. டிரைவர் சீட் அருகில் உள்ள சீட்டில் அமருபவர்களும், கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். சாலை விபத்திற்கு காரணமாக இருக்க கூடாது. சாகசங்கள் செய்யக்கூடாது. அதிக சத்தம் எழுப்பக்கூடாது. குறுகிய பாலங்களில் வாகனங்களை முந்தக் கூடாது' என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.--