/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைவருக்கும் பொங்கல் பரிசு :தமிழக முதல்வரிடம் முறையீடு
/
அனைவருக்கும் பொங்கல் பரிசு :தமிழக முதல்வரிடம் முறையீடு
அனைவருக்கும் பொங்கல் பரிசு :தமிழக முதல்வரிடம் முறையீடு
அனைவருக்கும் பொங்கல் பரிசு :தமிழக முதல்வரிடம் முறையீடு
ADDED : ஜன 09, 2024 12:38 AM
கோவை:அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வரிடம் முறையிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு, 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா அனுப்பியுள்ள கடிதத்தில், 'மாநகராட்சி, 26வது வார்டு பீளமேடு பகுதியில் உள்ள, நான்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்குவதற்கு 'டோக்கன்' தரப்படுகிறது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும், பலருக்கும் 'உங்களுடைய அட்டை எண் இத்திட்டத்தில் இல்லை' என்று திருப்பி அனுப்புவதால், பணியாளர்களிடம் வாக்குவாதம் ஏற்படுகிறது.
'உதாரணத்துக்கு, இங்குள்ள ராயப்பன் வீதி கடையில், 924 ரேஷன்தாரர்கள் உள்ள நிலையில், 250 பேருக்கு மேல் இத்திட்டத்தில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பும் சூழல் உள்ளது. எனவே, அனைத்து ரேஷன்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.