/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு கடை அனுமதி கேட்டு விண்ணப்பம்
/
பட்டாசு கடை அனுமதி கேட்டு விண்ணப்பம்
ADDED : அக் 18, 2024 10:24 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 121 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக பொதுமக்கள் புத்தாடை, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி பலரும் விண்ணப்பித்துள்ளனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி - 70, கிணத்துக்கடவு - 18, ஆனைமலை - 29, வால்பாறை - 4, என, மொத்தம், 121 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்ததனைகளும் கடை அமைக்க உள்ளவர்களிடம் தெரிவிக்கப்படும்,' என்றனர்.