/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளங்கலை பருவத் தேர்வுக்கு மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கணும்
/
இளங்கலை பருவத் தேர்வுக்கு மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கணும்
இளங்கலை பருவத் தேர்வுக்கு மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கணும்
இளங்கலை பருவத் தேர்வுக்கு மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கணும்
ADDED : பிப் 19, 2025 10:30 PM
கோவை; பாரதியார் பல்கலை இளங்கலை பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், 133 உறுப்பு கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பல்வேறு இளங்கலை, முதுகலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இளங்கலை பாடங்களுக்கான பருவத் தேர்வுகள், வரும் ஏப்., 16 முதல் நடக்க உள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலை இணையதளம், www.b-u.ac.in ல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் அபராதம் இன்றி, வரும் மார்ச் 5ம் தேதிக்குள்ளும், அபராதத்துடன், மார்ச் 10ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
1982 - 83 முதல், 2006 - 07 வரையிலான காலத்தில் பயின்ற மாணவர்கள், தோல்வியடைந்த பாடங்களுக்கான தேர்வுகளை, 2007 - 08 பாடத்திட்டத்தின் கீழ், எழுதலாம்.
இதற்கான பிரத்யேக விண்ணப்பத்தை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் இருந்து பெற்றோ அல்லது www.b-u.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம் என, பாரதியார் பல்கலை, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) அறிவித்துள்ளார்.

