ADDED : மார் 17, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் உயரதிகாரிகள், 37 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன் படி, கோவை மாநகர ஓ.சி.யு., சி.பி.சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு முரளிதரன் புதுகோட்டை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையிடத்து சிறப்பு பிரிவு சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோவை மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

