/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா
/
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா
ADDED : ஜன 21, 2024 11:55 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில், 115வது நிகழ்வாக, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு பாராட்டு விழா, லயன்ஸ் சங்க அரங்கில் நடந்தது.
இலக்கிய வட்ட தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் ஜெயக்குமார் வரவேற்றார்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகடாமி விருது பெற்ற 'நீர்வழிப்படூஉம்' நுாலின் ஆசிரியர் தேவிபாரதிக்கு பாராட்டு தெரிவித்து பேசும் போது, வட்டார வழக்கில் கொங்குச் சொற்களை மீட்டெடுக்கும் விதமாக நாவல் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கவிஞர் சின்னுச்சாமி, தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவிபாரதியின் விருது பெற்ற நாவலில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள், அதன் சொற்கட்டமைப்பு உட்பட பல்வேறு சிறப்புகளை பேசினார். கவிஞர் சுடர்விழி நாவலை அறிமுகப்படுத்தி பேசினார்.
திரைப்பட இயக்குனர் பிருந்தாசாரதி, கவிதை வாசித்த கவிஞர்களுக்குப் பரிசுகள் வழங்கி பேசும் போது, ''சாகித்ய அகாடமி பரிசுத்தொகை குறைந்த பட்ச தொகையாக, 25 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்,'' என்றார்.
கவிஞர் செந்தில்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். லயன்ஸ் ராதாகிருஷ்ணன், சேவலாயம் ஞானசேகர் ஆகியோர் எழுத்தாளர் தேவிபாரதிக்கு சிறப்பு செய்தனர். விழாவில் மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.