/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை கட்ட இடம் வழங்கியோருக்கு பாராட்டு
/
ரேஷன் கடை கட்ட இடம் வழங்கியோருக்கு பாராட்டு
ADDED : நவ 07, 2025 09:18 PM
கருமத்தம்பட்டி: பதுவம்பள்ளியில் ரேஷன் கடை கட்ட, இடம் வழங்கிய இரு விவசாயிகளுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி அடுத்துள்ளது பதுவம்பள்ளி ஊராட்சி. இங்கு, ரேஷன் கடை கட்ட, சூலுர் எம்.எல்.ஏ., கந்தசாமி, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். கடை கட்ட தகுந்த இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த ஊரை சேர்ந்த விவசாயிகளான பழனிசாமி, பாப்பண்ணன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான, 25 சென்ட் நிலத்தை ரேஷன் கடை கட்ட வழங்கினர். இதையடுத்து, அங்கு, கட்டுமானப்பணி நடந்து முடிந்தது.
ரேஷன் கடையை எம்.எல்.ஏ., கந்தசாமி, நேற்று திறந்து வைத்து பேசுகையில், அரசாங்க இடம் கிடைக்காமல், பல திட்டங்கள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. மக்களின் மீது அக்கறை கொண்டு, இங்கு ரேஷன் கடை கட்ட, ரூ. 1.25 கோடி மதிப்புள்ள இடத்தை வழங்கிய பழனிசாமி, பாப்பண்ணனுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன், என்றார். பொன்னாடை அணிவிக்கப்பட்டு இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.
ஒன்றிய செயலாளர்கள் கந்தவேல், குமரவேல் மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

