/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமா? சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
/
கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமா? சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமா? சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டமா? சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜன 24, 2025 10:56 PM

மேட்டுப்பாளையம்; மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் தொடர்பாக கேரள மாநில எல்லைகளான கோப்பனாரி, முள்ளியில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் உள்ளது.
தமிழகத்தில் கியூ பிரிவு போலீசாரும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
கேரளா வனப்பகுதியில் உள்ள மாவோஸ்ட்கள், மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதனிடையே அண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் கரியா பந்த் மாவட்ட வனப்பகுதியில் 27 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து நாடு முழுவதும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில், போலீசார் பழங்குடியினர்களிடம் மாவோயிஸ்ட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறுகையில், முள்ளி, கோப்பனாரி சோதனைச்சாவடிகளில் போலீசார் வழக்கம் போல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாவோயிஸ்ட்கள் தொடர்பாக அச்சுறுத்தல் எதுவும் இப்பகுதிகளில் இல்லை, என்றார். காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், மானார் பிரிவு, வீரக்கல், குண்டூர், அத்திகடவு, கொரவன்கண்டி, பில்லூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் குழுக்கள் வாயிலாக 10 கி.மீ.,தூரம்வரை உள்ளே சென்று மாவோயிஸ்ட்கள், அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கிறோம்.
கேரள வனப்பகுதியொட்டியுள்ள பகுதிகளில் இரு குழுக்கள் வாயிலாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.----