/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையேறப் போறீங்களா... கவனம்: அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை
/
மலையேறப் போறீங்களா... கவனம்: அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை
மலையேறப் போறீங்களா... கவனம்: அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை
மலையேறப் போறீங்களா... கவனம்: அரசு மருத்துவமனை டீன் எச்சரிக்கை
ADDED : மே 20, 2025 11:51 PM

கோவை; கோவை வெள்ளியங்கிரி மலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை, மலையேற்றத்தின் போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன், 15 வயது சிறுவன் ஒரவன் மலையேற்றத்தின் போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழு மலைகள் கொண்ட வெள்ளியங்கிரியின் மொத்த பயண துாரம், 6 கி.மீ., . கரடுமுரடான பாறைகள், செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து, உச்சியை அடைய வேண்டும். ஏழாவது மலை மிகவும் கடுமையான பயணமாக அமைகிறது. மலை ஏறுவதை காட்டிலும், இறங்குவது மேலும் கடினம்.
கடந்த மார்ச் முதல் தற்போது வரை, 4 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர். இதோ இப்போது 15 வயது பள்ளி சிறுவன். ஓரளவு வயதானவர்களுக்கு மலையேற்றத்தின் போது, பாதிப்பு ஏற்படுவது சரி; சிறுவர்களுக்கு ஏன்?
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டோம்...
தற்போது வெயில் கடுமையாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் மலையேற்றம் அனுமதிப்பதையே சற்று சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் இதய பாதிப்புகள் இருந்தால் அறிகுறிகள் தெரியாது. இம்மாணவன் இதய பாதிப்பு காரணமாகவோ, ஹீட் ஸ்ட்ரோக் காரணமாகவோ இறந்திருக்கலாம்.
முதியோர், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மலையேற்றங்களை தவிர்க்கவேண்டும். மலையேற்றத்தின் போது, உயரமாக செல்ல செல்ல ஆக்சிஜன் அளவு குறைந்து, காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். சாதாரண சமவெளி பரப்பில் நடப்பதை காட்டிலும், கூடுதல் சிரமம் ஏற்படும். இதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மலையேற்றத்திற்கு முன், உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குழந்தைகளை பொறுத்த வரையில், அதிக அளவில் விளையாட்டுக்களில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பின், தோட்டவேலை போன்ற பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு பிரச்னை இல்லை.
நான்கு சுவற்றுக்கு நடுவே ஏ.சி., பேன் என அறையில் வளர்ந்து, திடீரென இந்த கடுமையான வெயிலில் ஏற அனுமதிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை.
குழந்தைகளுக்கு உள்ள உடல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள், பெரும்பாலும் தெரிவதில்லை என்பதால், அவர்களை இது போன்ற இடர்மிகுந்த பயணங்களுக்கு தவிர்ப்பது நல்லது.
நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் இதுபோன்ற மலையேற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மலையேற்றத்தின் போது, உயரமாக செல்ல செல்ல ஆக்சிஜன் அளவு குறைந்து, காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். சாதாரண சமவெளி பரப்பில் நடப்பதை காட்டிலும், கூடுதல் சிரமம் ஏற்படும். இதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.