தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? படித்ததை மறக்காமல் இருக்க ‘டிப்ஸ்’

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? படித்ததை மறக்காமல் இருக்க ‘டிப்ஸ்’

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? படித்ததை மறக்காமல் இருக்க ‘டிப்ஸ்’


UPDATED : நவ 21, 2026 07:22 PM

ADDED : நவ 21, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 07:22 PM ADDED : நவ 21, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி. நீட், வங்கி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், தினமும் பல பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது. புதிய பாடங்களைப் படிப்பதுடன், ஏற்கெனவே படித்தவற்றையும் நினைவில் வைத்திருப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது. படிக்கும் முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்திருக்க முடியும்.

படித்ததை சொல்லிப் பாருங்கள்



ஒரு பாடத்தைப் படித்து முடித்ததும், அதில் படித்த முக்கியமானதை நினைவுபடுத்திப் பாருங்கள். முடிந்தால் அவற்றை எழுதிப் பார்க்கலாம். மாதிரிக் கேள்விகளுக்கு விடையளிப்பதும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

படித்ததை அடிக்கடி படியுங்கள்



ஏற்கெனவே படித்தவற்றையும் அவ்வப்போது திருப்பிப் பார்க்க வேண்டும். ஒரு பாடத்தைப் படித்த மறுநாள் , 3 நாள் கழித்து, பின்னர் 7 நாள் கழித்து என இடைவெளி விட்டு மீண்டும் படிக்கலாம். இது 1-3-7 இடைவெளி விட்டு மீண்டும் படிக்கும் முறை எனப்படும்.

தவறான விடைகளுக்கும் கவனம் தேவை



மாதிரித் தேர்வுகளில் தவறாகப் பதிலளித்த கேள்விகளை குறித்து வைத்து, அந்தப் பாடத்தை மீண்டும் படித்து, சில நாட்கள் கழித்து அதே கேள்விகளுக்குப் பதிலளித்துப் பாருங்கள். இதன் வாயிலாக எந்தப் பாடங்களில் இன்னும் பயிற்சி தேவை என்பதை கண்டறியலாம்.

துாக்கத்தை தவிர்க்க வேண்டாம்



தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதைவிட, சிறிது நேரம் கவனத்துடன் படித்துவிட்டு இடையில் ஓய்வெடுப்பது நல்லது. இரவு முழுவதும் படிப்பதைத் தவிர்த்து, சரியான நேரத்தில் துாங்க வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைத்தால்தான் அடுத்த நாள் படிக்க முடியும்.

போட்டித் தேர்வுகளுக்கு எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படிப் படிக்கிறோம் என்பதே முக்கியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us