தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 22/11/2026

கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 22/11/2026

கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 22/11/2026


ADDED : நவ 21, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உபநிஷத் சொற்பொழிவு



ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் ‘உபநிஷத் சொற்பொழிவு’ நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாதில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.

ஓவிய கண்காட்சி



கஸ்துாரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ‘வாய்ஸ் ஆப் தி வைல்ட்’, என்னும் தலைப்பில், வனவிலங்கு ஓவிய கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள கஸ்துாரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரியில் காலை 10 முதல் 6.30 மணி வரை நடக்கிறது.

விளையாட்டுப் போட்டிகள்



தினமலர் மற்றும் ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு ‘திருவிழா 2026’ நடக்கிறது. இதில் கால் பந்து, கூடைப்பந்து, சதுரங்கம், கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

விழிப்புணர்வு சிறப்புரை



சுவாமி விவேகானந்தர் இளைஞர்சக்தி இயக்கம் சார்பில் ‘நமது தேசம் புண்ணிய தேசம்’, மாதந்தோறும் நடைபெறும் விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. முத்துக்கவுண்டன்புதுார், ரயில்வே மேம்பாலம் அருகில், சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் மாலை 5.30 முதல் 8 மணி வரை நடக்கிறது.

நுால் வெளியீட்டு விழா



‘குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது’, ‘வாகைப் பூக்கள்’ ஆகிய நுால்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. அரசு மருத்துவமனை எதிரில் பொறியாளர் இல்லம், ரயில்வே குடியிருப்பில் காலை 10 மணிக்கு நடக்கும்.

மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி



‘மெடிக்கான் எக்ஸ்போ 2026’ மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் அறுவை சிகிச்சை கருவிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உபகரணங்கள் என 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. கொடிசியா வர்த்தகக் வளாகத்தில் காலை 10.30 முதல் 6 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி



கோவை மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், ‘பில்ட் எக்ஸ்கான் 2026’ கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் புதிதாக கட்டும் வீட்டின் கட்டுமான பொருட்களின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். கொடிசியா வர்த்தக வளாகம், ஹால் இ – யில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us