ADDED : நவ 21, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
வடவள்ளி: வடவள்ளியில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள 34 திட்டப்பணிகளை, அமைச்சர் சம்பத்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாநகராட்சி சார்பில், கோவை மத்தியம், மேற்கு, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் அமைத்தல், தார் சாலை அமைத்தல், சிறுவர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான, பூமி பூஜை இன்று (நவ.,21) வடவள்ளியில் உள்ள சிறுவர் பூங்காவில் நடந்தது. இதில், அமைச்சர் சம்பத்குமார் ரூ.17.24 கோடி மதிப்பிலான, 34 பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா, எம்.எல்.ஏ., ஸ்ரீகிரிபிரசாத், கவுன்சிலர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
