/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு தகராறு; 4 பேர் கைது
/
மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு தகராறு; 4 பேர் கைது
ADDED : அக் 23, 2024 10:36 PM
மேட்டுப்பாளையம்: மதுபோதையில் தீப்பெட்டி கேட்டு, தகராறு செய்து இளைஞரை தாக்கிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் பாரத் பவன் சாலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ், 22. இவர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஐந்து முக்குப் பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி இரவு சுமார் 10:30 மணி அளவில், வியாபாரத்தை முடித்துவிட்டு பேக்கரியை பூட்டிக் கொண்டிருந்தார். அப்போது மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ், 39, மனோஜ், 29, ரித்திஷ், 29, சேது மாதவன், 24, அன்னூரை சேர்ந்த தமிழ், 26, ஆகிய ஐந்து பேரும் மதுபோதையில், வந்து அனீஸிடம் தீப்பெட்டி கேட்டு தகராறு செய்தனர். தகராறு முற்றி, அனீஸை, இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து தாக்கினர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்ததை அடுத்து, இவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து, அனீஸ் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ், மனோஜ், ரித்தீஷ், சேது மாதவன் ஆகிய நான்கு பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அன்னுாரை சேர்ந்த தமிழை தேடி வருகின்றனர்.--

