/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது வீடுகளின் சாவியை ஒப்படைத்த 'அரிமா'
/
புது வீடுகளின் சாவியை ஒப்படைத்த 'அரிமா'
ADDED : செப் 08, 2025 06:14 AM
கோவை; அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம், சரவணம்பட்டியில் 'லாங்கிட்யூட்' என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பினை உருவாக்கியுள்ளது. இதன் புதிய இல்ல சாவிகளை வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கும் விழா நடந்தது.
மழைநீர் சேகரிப்பு வசதி, பைப்லைன் எரிவாயு இணைப்பு, 24 மணி நேர தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், அரிமா லாங்கிட்யூட் அமைந்துள்ளது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடம், ரூப் டாப் காபெட்டீரியா, ரூப் டாப் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, விழா அரங்கம், புல்வெளியுடன் கூடிய பூங்கா, உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளன. இங்கு திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.