/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன வழிபாடு
/
சிவாலயங்களில் நாளை ஆருத்ரா தரிசன வழிபாடு
ADDED : ஜன 02, 2026 05:48 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா நாளை (3ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடந்த மாதம், 25ம் தேதி மாணிக்க வாசகர் உற்சவம் துவங்கியது. இன்று இரவு, 7:00 மணிக்கு சிவகாமி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நாளை (3ம் தேதி) அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர் அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 4ம் தேதி மாலை, 5:30 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
* நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில் நாளை அதிகாலை 4:30 மணிக்கு, மகா அபிஷேகம் நடக்கிறது. காலை 6:30 மணிக்கு, அலங்கார தீபாராதனையும், காலை 7:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், 7:45 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அம்மணீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, கோமாதா பூஜை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணமும், காலை 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து அன்ன தானமும் நடக்கிறது.

