sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காண்டூர் கால்வாயில் பழுதடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

 காண்டூர் கால்வாயில் பழுதடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

 காண்டூர் கால்வாயில் பழுதடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

 காண்டூர் கால்வாயில் பழுதடைந்த பகுதிகள் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 02, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியான காண்டூர் கால்வாயில் மிகவும் பழுதடைந்துள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடித்து தாமதமின்றி தண்ணீர் கொண்டு வரப்பட்டு, முதலாம் மண்டல பாசனத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பி.ஏ.பி., திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய், 1963ல் வெட்டப்பட்டு கடந்த 62ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. பி.ஏ.பி., திட்டத்தின் தொகுப்பு அணைகளில் சேகரிக்கப்படும் மழைநீரை சர்க்கார்பதி மின்நிலையத்துக்கு கொண்டு வந்து, அங்கு மின் உற்பத்தி செய்த பின், திருமூர்த்தி அணைக்கு கொண்டு சேர்க்கிறது காண்டூர் கால்வாய். இக்கால்வாயின், 49.30 கி.மீ., நீளத்தில், 9.425 கி.மீ., சுரங்கபாதையாகும்.

மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே வரும் ஓடைகளின் நீரினை, அந்தந்த ஓடைகளிலேயே திருப்பி விடுவதற்கு, 'சூப்பர் பேசேஜ்', 'அண்டர் டனல்' மற்றும் 'ப்ளஸ் எஸ்கேப்' ஆகிய வசதிகள் திட்ட காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில், இயற்கையான சேதாரங்களினால் நீர் விரயம் மிக கடுமையாக இருந்தது. இதனால், திருமூர்த்தி அணை பாசனம் கேள்விக்குறியாகிவிட்டது.

சர்க்கார்பதியில் இருந்து வினாடிக்கு, 1,150 கனஅடி தண்ணீர் விடப்பட்டால் திருமூர்த்தி அணைக்கு சுமார், 600 கனஅடி மட்டுமே சென்றடைந்தது. நீர் இழப்பு சராசரியாக, 41 சதவீதம் வரை இருந்தது.

அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் இக்கால்வாயின் சுவர்களை மரங்களின் வேர்கள் சேதப்படுத்தியது. மேலும், நீண்ட கால பயன்பாட்டின் காரணமாக கட்டுமானங்கள் பல இடங்களில் சிதிலமடைந்துவிட்டது. இதனால், நீர் கசிவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே இருந்தது.

இது குறித்து விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், சீரமைப்பு பணிகள், 221.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2011ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து, நான்கு ஆண்டுகள் நடைபெற்றன. சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காலங்களில், ஆண்டுக்கு ஆறு மாதம் தண்ணீர், ஆறு மாதம் கால்வாய் பணி என்று பொதுப்பணித்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன.

காண்டூர் கால்வாயின் இருபுறமும் கம்பி கட்டி கான்கீரீட் சுவர்கள் அமைத்தும், கால்வாயின் தரைப்பகுதியில் கான்கீரிட் தளம் அமைத்தும், பாறைகள் இருந்த இடத்தில், 'அரை வட்ட சுவர்' அமைத்தும் பணிகள் நடைபெற்றன.

மலையில் இருந்து பாறைகள் விழக்கூடிய இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில், கால்வாயின் மேற்பகுதிகளில், 'கான்கீரீட் தடுப்புகள்' அமைக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காலத்தில், கிடைத்த நிதியை கொண்டு தண்ணீர் சேதாரம் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில், ஒரு சில பகுதிகளில் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருந்தன. தற்போது, டிச. 15ம் தேதி முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டு, அரசு ஒதுக்கிய, 16.9 கோடி ரூபாய் நிதியில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

காண்டூர் கால்வாயில், மிகவும் பழுதடைந்துள்ள, 10.7 கி.மீ. முதல் 11.1 கி.மீ. வரையும், 12.56 கி.மீ. முதல், 12.76 கி.மீ. வரையும், மேலும், நீரார் கால்வாய் நுழைவுப்பகுதியில், உள்ள அவசரகால தண்ணீர் திறப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மதகுப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது, பாசன சபை தலைவர்கள், விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில்,'காண்டூர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து, இம்மாதம் முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். இதற்காக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us