/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்? தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?
/
தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்? தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?
தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்? தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?
தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்? தாளியூரில் 3 சென்ட் டி.டி.சி.பி., சைட் என்ன விலைக்கு வாங்கலாம்?
ADDED : ஆக 01, 2025 07:54 PM
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் கிராமம், தாளியூர் பகுதியில் மூன்று சென்ட் டி.டி.சி.பி., சைட் விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
- அழகுசாமி, தொண்டாமுத்துார்.
தாளியூர் என்பது தற்சமயம், கோவை விரிவாக்கத்தில், ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. இது வடவள்ளியில் இருந்து இரண்டு கி.மீ.,க்குள் மற்றும் தடாகம் ரோடு பால் கம்பெனியில் இருந்து, பஸ் போக்குவரத்து சவுகரியம் உண்டு. டி.டி.சி.பி., என்பதால், எந்த விதமான மற்ற சிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை. அடுத்து வரும் வீடுகளும், மத்திய வர்க்கமும் அதற்கு மேல் வர்க்கமும்தான் வர வாய்ப்புண்டு. எனவே, துணிந்து சென்ட்டுக்கு, ரூ.10 லட்சம் வரை கொடுத்து வாங்கலாம்.
கோவை மாவட்டம், கணியூர் கிராமத்தில் டி.டி.சி.பி., அனுமதி, 5.5 சென்ட் இடம் (40*60) 30 அடி தார் சாலை, 50 சதவீதம் கட்டடங்கள் கட்டி உள்ளார்கள்; இது காலியிடம்தான். என்ன விலை கொடுக்கலாம்.
-பார்த்தசாரதி,கணியூர்.
டி.டி.சி.பி., அனுமதி பெற்ற சைட்டில், 50 சதவீதம் கட்டடங்கள் ஆகிவிட்டது என்பதே பாராட்டுதலுக்குரிய விஷயம்.
இந்நிலையில் பாதுகாப்பு, பொது பஞ்சாயத்து வசதிகள், ரோடு போன்றவற்றை கண்டிப்பு செய்து பெறமுடியும். தண்ணீர் வசதியும் பெறமுடியும். இந்த நிலையில் மேற்கு, கிழக்கு திசைகளை பார்த்து இருப்பது பொறுத்து, ரூ.8 முதல், 10 லட்சம் வரை விலையை நிர்ணயம் செய்யலாம்.
கோவை காளப்பட்டியில், டி.டி.சி.பி., சைட் விலைக்கு வந்துள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த சைட் என்பதால், என்ன விலைக்கு வாங்கலாம்.
- ஸ்ரீனிவாசலு, சரவணம்பட்டி.
தாங்கள் குறிப்பிடும் இடம், ஏர்போர்ட்டில் இருந்து மூன்று கி.மீ.,க்குள் இருக்க வாய்ப்புள்ளது. விமான நிலையம் சர்வதேச அளவில் விரிவாக்கம் அடைய இருப்பதால், இதுபோன்ற இடங்களுக்கு கிராக்கி அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இதே நிலையில் ரூ.12.5 லட்சம் என்பது நல்ல விலையாகும்; துணிந்துவாங்கலாம்.
கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு, நான்கு தளங்களில், 12 வீடுகள் உள்ளன. 2011ல், 1050 சதுரடி பரப்பளவுடன், யு.டி.எஸ்., 450 சதுரடி விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-வைரவன், கோவை.
தாங்கள் கூறும் இடம், குருடம்பாளையம் கிராமத்தில் பிரபலமானது. கடந்த, 15 ஆண்டுகளில், 40க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் கட்டி உள்ளார்கள். வாடகை ரூ.10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரும் எனில், இதன் மதிப்பு ரூ.40 முதல், 45 லட்சம் பெறும்.
-தகவல்:
ஆர்.எம். மயிலேறு,
கன்சல்டிங் இன்ஜினியர்.