/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையம் எட்டாவது நாளாக முடக்கம்
/
அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையம் எட்டாவது நாளாக முடக்கம்
அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையம் எட்டாவது நாளாக முடக்கம்
அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையம் எட்டாவது நாளாக முடக்கம்
ADDED : நவ 11, 2025 10:50 PM
அன்னுார்: அத்திக்கடவு நீரேற்று நிலையம் எட்டாவது நாளாக நேற்றும் செயல்படவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், அத்திக்கடவு திட்டத்தில் 1,045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அன்னூர் அருகே குன்னத்துாராம்பாளையத்தில் உள்ள ஆறாவது நீரேற்று நிலையத்திலிருந்து குளம் குட்டைகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடவள்ளி, குப்பேபாளை யம், காட்டம்பட்டி, பொகலுார் உள்ளிட்ட மேற்குப் பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அத்திக்கடவு நீர் செல்வதில்லை. எனவே உடைப்பை சரி செய்த பிறகு நீரேற்று நிலையத்தை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் உடைப்பு சரி செய்யப்படாததால் எட்டாவது நாளாக நேற்றும் குன்னத்துாராம் பாளையத்தில் உள்ள அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் இயக்கப்படாமல் முடங்கியுள்ளது.
இதுகுறித்து திட்ட ஆர்வலர்கள் கூறுகையில், 'அன்னுாரின் மேற்குப் பகுதியில் பல குளம் குட்டைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரை வரவில்லை. ஒப்பந்த நிறுவனம் குழாய் உடைப்பு, வால்வு கசிவு ஆகியவற்றை சரி செய்வதில் மெத்தனம் காட்டுகிறது.
இதனால் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டும் 50க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. விரைவில் குழாய் உடைப்பு, கசிவு ஆகியவற்றை சரி செய்து, மேற்குப் பகுதியில் உள்ள குளம் குட்டைகளுக்கு தண்ணீர் விட வேண்டும். முடங்கி உள்ள நீரேற்று நிலையத்தை இயக்க வேண்டும்,' என்றனர்.

