/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு
/
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு
ADDED : நவ 11, 2025 10:49 PM
பெ.நா.பாளையம்: தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, தோட்டக்கலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைச்சல் இழப்புகளை, புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதன் வாயிலாக தவிர்க்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விவசாயிகள் ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையை அருகாமையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், பொது சேவை மையம் அல்லது அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் வாயிலாக செலுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.
வாழை ஒரு எக்டருக்கு, 4937.54 ரூபாய் பிரிமியம் தொகையாக வரும் பிப். 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தக்காளி எக்டருக்கு, 3908.80 ரூபாய் பிரிமியம் தொகையாக வரும், 2026 ஜன. 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

