/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை
ADDED : நவ 11, 2025 10:49 PM

மேட்டுப்பாளையம்: தலைநகர் டில்லியில் நடைபெற்ற கார்குண்டு வெடிப்பு எதிரொலியாக, மேட்டுப்பாளையத்தில் இரவு நேர ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர்.
டில்லி சம்பவத்தை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வாகனங்களை யாரவது திருடி வந்துள்ளனரா, சந்தேகம்படும்படியான நபர்கள் உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவு கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் மேட்டுப்பாளையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

