/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அத்திக்கடவு குடிநீர் வினியோகம்
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அத்திக்கடவு குடிநீர் வினியோகம்
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அத்திக்கடவு குடிநீர் வினியோகம்
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அத்திக்கடவு குடிநீர் வினியோகம்
ADDED : மார் 25, 2025 12:31 AM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களின் தாகம் தீர்க்க, 8 இடங்களில் அத்திக்கடவு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வது வார்டு குப்பிச்சிபாளையம் ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 1800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இதில், 50 சதவீத குடியிருப்புகளில் பொதுமக்கள் குடியேறி உள்ளனர். இங்கு ஆழ்குழாய் கிணறு தண்ணீர் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மேலும், குடியிருப்புக்கு முன் பகுதியில் மேல்நிலைத் தொட்டி அருகே ஒரு அத்திக்கடவு குடிநீர் குழாய் இணைப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது, அத்திக்கடவு குடிநீர் இரட்டை குழாய், 8 இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் விஷ்வ பிரகாஷ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், தி.மு.க., அவை தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.