தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அறிவுத்தளத்தின் மீது நடந்த தாக்குதல்: எழுத்தாளர் மு.ஆனந்தன் கருத்து

அறிவுத்தளத்தின் மீது நடந்த தாக்குதல்: எழுத்தாளர் மு.ஆனந்தன் கருத்து

அறிவுத்தளத்தின் மீது நடந்த தாக்குதல்: எழுத்தாளர் மு.ஆனந்தன் கருத்து


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ‘‘அறிவுத்தளத்தின் மீது நடந்த தாக்குதலை தடுக்க வேண்டும்,’’ என, எழுத்தாளர் மு.ஆனந்தன் கூறினார்.

எழுத்தாளர் மு.ஆனந்தன் கூறியதாவது:

ஈ.வெ.ரா., நுாலகத்துக்கு சென்று அங்கிருந்த பல நுால்களை ஆய்வு செய்தோம். அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து 2300 நுால்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேல் எழுத்தாளனாக உள்ளேன். 50 ஆண்டுகளாக அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களே இல்லை என்பது தான் உண்மை.

இச்செய்தியை கேட்டு பப்பாசி அமைப்பும், இதுவரை இவ்விரு பதிப்பகங்களும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. இவை போலியானவை என்பது உறுதியாகியுள்ளது.

நுாலகத்தில் உள்ள 2300 புத்தகங்களில், ஒரு சிலவற்றை பரிசோதித்த போது, அந்நுால்களின் எழுத்தாளர்கள் பெயர்கள் இதுவரை கேள்விப்படாதவையாக உள்ளன.

அதேபோல், புத்தகங்களின் பெயர்களும் கேள்விப்படாத ஒன்றாக உள்ளது. இந்த ஊழலை பணம் சம்பந்தப்பட்ட ஒன்றாக பார்க்கவில்லை. புத்தகங்கள் என்பது அறிவுத்தளத்தில் இருக்கக்கூடிய ஒன்று.

அனைத்து தரப்பினருக்கும் அறிவை தரக்கூடியவை. அதையே கொள்ளையடித்து தவறான வரலாறு, தகவல்களை வழங்கியது மிகப்பெரிய குற்றம். ஈ.வெ.ரா., அறிவுலகம் என பெயர் வைத்து விட்டு அறிவை சீர்கெடுக்ககூடிய விசயங்களை செய்துள்ளனர். இவை புத்தகங்களே இல்லை. வாசிப்போர் தவறான தகவல்களை பெற வாய்ப்புள்ளது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

வேறு போலி பதிப்பகங்களிடம் இருந்து புத்தகம் வாங்கப்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நுாலகங்களில் இதுபோன்று நடந்துள்ளதா என்று விசாரிக்க வேண்டும்.

இதை அரசியலாக பார்க்காமல், அறிவு சார்ந்த விசயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவுதளத்தின் மீது நடந்த தாக்குதலாகத் தான் பார்க்கிறோம். இது ஆராய்ச்சி, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us