/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி
/
வனத்துறை அதிகாரிகளை தாக்க முயற்சி
ADDED : டிச 04, 2024 12:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே கெம்மாரம்பாளையம் கிராமத்தில் சின்னகண்டியூர் பகுதி உள்ளது. சின்னகண்டியூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடஷ், 30,. இவரை காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
வெங்கடேஷின் உறவினரான கருப்பசாமி என்பவர் பெரிய கல்லை எடுத்து வனத்துறையினர் வந்த ஜீப்பின் மீது முன், பின் என இரண்டு இடங்களிலும் வீசினார். அரிவாள் மற்றும் கற்களால் வனத்துறையினரை தாக்க முற்பட்டார். பின் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். காரமடை போலீசார் வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.