UPDATED : அக் 28, 2026 09:48 PM
ADDED : அக் 28, 2026 09:44 PM
ஒண்டிப்புதுார் மின்வாரிய பிரிவு அலுவலக எல்லைக்குட்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் ஆட்டோ அக்கவுன்ட் குளோஷர் நடைமுறைப்படுத்தவில்லை என சொல்கிறார் பிந்து.
இது குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்:
தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், 90 நாட்களுக்கு மேல் தானாகவே நிரந்தரமாக ரத்து செய்யும் நடைமுறையே ‘ஆட்டோ அக்கவுன்ட் குளோஷர்’.
மின்கட்டணம் செலுத்தாததாலோ, வேறு சில காரணங்களாலோ மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 90 நாட்கள் கடந்தும் மீண்டும் இணைப்பு பெறாமல் இருந்தால், இந்த தானியங்கி கணக்கு முடிப்பதற்கான நடைமுறை துவங்கும்.
முதலில் மின் இணைப்பை ரத்து செய்யப்போகிறோம் என்றும், பின் மின் இணைப்பை நிரந்தரமாக ரத்து செய்யும் ஒப்பந்த ரத்து அறிவிப்பும், அதற்கான இணைய லிங்கும் போனுக்கு குறுஞ்செய்தியாக வரும்.
இந்த அறிவிப்புக்கு பின்பு அடுத்த 90 நாட்களில் நிலுவை தொகையை செலுத்தி இணைப்பை மீட்கவில்லை என்றால், மின் இணைப்பு நிரந்தரமாக துண்டித்து மீட்டர் அகற்றப்படும்.
