ADDED : ஜன 30, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; துடியலுார், சேரன் காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 47. இவரது கணவர் மாணிக்கம், உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன் தினம் புவனேஸ்வரி தனது கணவரை, ஆட்டோவில் அழைத்து சென்றார்.
பின்னர், தனது கணவரிடம் ஹேண்ட்பேக்கை கொடுத்து விட்டு, கழிவறைக்கு சென்றார். அவர் திரும்பி வரும் போது, வாலிபர் ஒருவர் மாணிக்கம் கையில் இருந்த, ஹேண்ட்பேக்கை பறித்து சென்றுள்ளார்.
இதைப்பார்த்த புவனேஸ்வரி சத்தம் போட, ஆட்டோ டிரைவர் ரகுராம் வாலிபரை துரத்தி பிடித்தார். அந்த வாலிபரை துடியலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர், துடியலுாரை அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்த நவீன், 27 என்பது தெரிய வந்தது. புவனேஸ்வரி புகாரில் போலீசார் நவீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

