ADDED : ஜன 28, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அருகே, தேயிலை எஸ்டேட்டில் இறந்து கிடந்த யானைக்கு, வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதியில், 50 வயது பெண் யானை இறந்து கிடப்பதை, வனத்துறையினர் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர்.
இதனையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் பிரியதர்ஷினி தலைமையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், வனவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில், கால்நடை மருத்துவர் விஜயராகவன், உதவி கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் ஆகியோர் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ேஷக்கல்முடி எஸ்டேட்டில் வயது முதிர்வு காரணமாக, பெண் யானை இறந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின், யானைகள் உடற்கூறுகள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது,' என்றனர்.

