/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பாரதிய வித்யா பவன் சார்பில் விருது வழங்கும் விழா
/
கோவை பாரதிய வித்யா பவன் சார்பில் விருது வழங்கும் விழா
கோவை பாரதிய வித்யா பவன் சார்பில் விருது வழங்கும் விழா
கோவை பாரதிய வித்யா பவன் சார்பில் விருது வழங்கும் விழா
ADDED : பிப் 02, 2025 01:18 AM

கோவை: பாரதிய வித்யா பவன் கோவை மையம் சார்பில், விருது வழங்கும் விழா, நேற்று ஆர்.எஸ்.புரம் பவன் அரங்கில் நடந்தது. இதில், பாரதிய வித்யா பவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ் மாமணி விருது எழுத்தாளர்அமுதன் என்பவருக்கும், தமிழ்ப்பணிச் செம்மல் விருது கவிஞர் மரபின்மைந்தன் முத்தையாவுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா கூறியதாவது:
மாணவர்கள் ஒன்பது, பத்தாம் வகுப்பில் துவங்கி கல்லுாரி முடிப்பதற்குள், தனது ஆற்றல் எது, ஆர்வம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
நேரம் என்பது போனால் கிடைக்காது. நம்மை மேலாண்மை செய்து சீர்படுத்திக்கொண்டால், நேரத்தை சரியாக பயன்படுத்த துவங்கிவிடுவோம். தேவையற்ற போதை பழக்கவழக்கங்களில் இருந்து விலகி நிற்கவேண்டும்.
புகை, மது, போதைக்கும், ஒழுக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆடு, மாடு கூட தேவையற்ற, விஷமுள்ள புற்களை மேய்வதில்லை. கால்நடைகளுக்கு உள்ள குறைந்தபட்ச அறிவு இல்லாதவர்களே புகை, மது, போதைக்கு மாட்டிக்கொள்கின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்வில், பாரதிய வித்யா பவன் செயலாளர் அழகிரிசாமி, இணை செயலாளர் சூர்யநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.