/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை பேராசிரியருக்கு விருது
/
பாரதியார் பல்கலை பேராசிரியருக்கு விருது
ADDED : செப் 10, 2025 10:38 PM
கோவை; அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட, எஸ்.ஏ.எஸ்.,(சாஸ்) பன்னாட்டு புள்ளியியல் நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த ஆய்வாளருக்கான விருது வழங்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பாட்டு பகுப்பாய்வு முறையில், எதிர்கால பணியாளர்களை உருவாக்குதல் என்ற ஆய்வு திட்டத்துக்காக, பாரதியார் பல்கலை புள்ளியியல் துறை பேராசிரியர் காந்தியவேந்தனுக்கு, நடப்பாண்டுக்கான 'சாஸ்' விருது வழங்கப்பட்டது.
காந்தியவேந்தன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய குழு பிரதிநிதியாகவும், நெதர்லாந்து சர்வதேச புள்ளியியல் நிறுவனத்தில், இந்தியாவுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.
இவருக்கு, மாநில மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், பேராளுமை பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. பல்கலை பதிவாளர் ராஜவேல் உள்ளிட்டோர், அவரை பாராட்டினர்.