/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல் சுகாதாரத்துக்கு விழிப்புணர்வு
/
பல் சுகாதாரத்துக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 11, 2025 08:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரோட்டரி கிளப் மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் 'ஆரோக்கிய சிரிப்பே மகிழ்ச்சியான வாழ்க்கை' என்ற தலைப்பில் பல் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி சாந்திநிகேதன் பள்ளியில் நடந்தது.
ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். பல் டாக்டர் பாரித் கலந்து கொண்டு பற்களில் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்.
குறிப்பாக, பற்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். ஈறுநோய் வந்தால், ஈறு சிவக்கும். வீக்கம், ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம் ஏற்படும். ஒவ்வொரு பாதிப்பிற்கும் அறிகுறிகள் தென்படும். பாதிப்பை தவிர்க்க பற்களை பொக்கிஷமாக பாதுகாப்பது அவசியம், என, தெரிவிக்கப்பட்டது.