/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
/
தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜூலை 03, 2025 09:24 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ராமு கலை அறிவியல் கல்லுாரியில், உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை மற்றும் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லுாரியில், 'டிபன்ஸ்' பாடப்பிரிவு மாணவர்களுக்கு, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை மற்றும் தீ விபத்து தடுப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி டீன் கீதாஞ்சலி, கல்லுாரி முதல்வர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி தீயணைப்புத்துறை அதிகாரி திருஞானசம்பந்தம் தலைமையிலான வீரர்கள், டாக்டர்கள் திருமேனிநாதன், திருச்சிற்றம்பலவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், 100 மாணவர்கள் பங்கேற்றனர்.