/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை பாதுகாப்புக்கு விழிப்புணர்வு பிரசாரம்
/
இயற்கை பாதுகாப்புக்கு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 18, 2024 11:57 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இயற்கை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது.
'இயற்கையை நேசி' என்ற, பொதுநல அறக்கட்டளை, 'பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப்' சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்து, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம், பொள்ளாச்சியில் நேற்று துவங்கியது. டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
அதில், 50க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் உறுப்பினர்கள், 'காடுகளை காப்போம், காட்டுயிர்களை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு பதாகையுடன் சென்றனர்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மோட்டார் சைக்கிள் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சியில் துவங்கி, குமுளி அருகே கவிவனம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன பயணம் மேற்கொள்ளப்படுகிறது என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

