/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் நோய் கண்டறிதல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பயிர் நோய் கண்டறிதல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2025 09:11 PM

கிணத்துக்கடவு; வேளாண் மாணவர்களுக்கு பயிர் நோய் கண்டறிதல் மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து பேராசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூர் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை பேராசிரியர் வனிதா மற்றும் காய்கறி பயிரியல் துறை பேராசிரியர் தங்கமணி ஆகியோர் விவசாயிகளுக்கு, கத்தரி மற்றும் தக்காளியில் ஏற்படும் வாடல் நோய் குறித்து விளக்கினார்கள். மேலும், கிழங்கு பயிர் சாகுபடியை ஊக்குவித்தல், பயிர் பாதுகாப்பு போன்றவைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மாணவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு, அவரையில் விதை நேர்த்தி மற்றும் வாழையின் கன்று நேர்த்தி குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.