/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 10, 2025 10:39 PM
பெ.நா.பாளையம், ; பெரியநாயக்கன்பாளையம் மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு குழு கூட்டம் நடந்தது.
பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறை விதிகளின்படி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். வக்கீல் சண்முகம் தலைமை வகித்து, ராக்கிங் தொடர்பான தண்டனை சட்ட பிரிவுகள், ராக்கிங் முறையினால் வரும் பாதிப்புகள், கலாசாரத்தை பேணிக்காப்பது, நல்லொழுக்கம் ஆகியவை குறித்து பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பெருமாள், ராக்கிங் தொடர்பான விவகாரங்களில் போலீசாரின் நடவடிக்கைகள், சமூக தீமைகள், தனிமனித ஒழுக்கம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். உதவி பேராசிரியர் தங்கமணி நன்றி கூறினார்.